போலி பாஸ்போர்ட் தயாரித்து மோசடி : ஒரு பெண் உள்பட 3 பேர் கைது - சிபிஐ அதிரடி

புதுச்சேரி மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து, பொது மக்களிடம் பணம் பெற்று கொண்டு அவர்களை பிரான்ஸ் நாட்டிற்கு, சட்ட விரோதமாக ஒரு கும்பல் அனுப்பி வருவதாக சிபிஐக்கு புகார் சென்றது.

Update: 2019-07-17 22:18 GMT
புதுச்சேரி மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து, பொது மக்களிடம் பணம் பெற்று கொண்டு அவர்களை  பிரான்ஸ் நாட்டிற்கு, சட்ட விரோதமாக ஒரு கும்பல் அனுப்பி வருவதாக சிபிஐக்கு புகார் சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவரது தலைமையிலான கும்பல், போலி பாஸ்போர்ட் தயாரிப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தலைமறைவான ஸ்டெல்லாவை தேடி வந்த சிபிஐ அதிகாரிகள், ஸ்டெல்லா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உழவர்கரை குமார், பச்சையப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்