"ஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம்" - சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்
ஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம் என்றும் அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாகவும் சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம் என்றும் அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாகவும் சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரத்தநாடு சட்ட மன்ற உறுப்பினர் ராமசந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஆவின் பாலகங்கள் தொடங்க குறைந்த பட்சம் 100 சதுர அடி இடம், 10 ஆண்டுகளுக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ எடுத்துள்ளதற்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும் என்றார்.