4 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் மக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2019-07-15 03:17 GMT
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குமாரக்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலவும் மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வருவதாக கூறும் அப்பகுதி மக்கள், அவசர தேவைகளுக்கு அங்குள்ள குளத்து நீரை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஜெனரேட்டர் மூலம் மோட்டாரை இயக்கி, பொதுமக்களுக்கு குடிநீரை வினியோகிக்க வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்