பாலாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்தால் நடவடிக்கை - சி.வி. சண்முகம்

பாலாற்றில் அனுமதி இன்றி மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.

Update: 2019-07-11 18:56 GMT
பாலாற்றில் அனுமதி இன்றி, மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார். பாலாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், பாலாற்றின் அனுமதி இன்றி, மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மணல் எடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தால் அதுகுறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்