முல்லை பெரியாறு அணையில் ஆய்வு : தமிழக அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்பு
முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் நியமித்த மூவர் குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் புதிய தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் நியக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர். இரண்டு மாதங்களுக்கு பின் அணையை ஆய்வு செய்யும் இக்குழுவினர் தேக்கடியில் உள்ள படகுத்துறை வழியாக சென்றனர். பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி உள்ளிட்டவற்றை அவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் இக்குழுவினர் குமுளியிலுள்ள அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.