படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் - நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து நீரில் தத்தளித்த 4 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.
குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து, நீரில் தத்தளித்த 4 மீனவர்களை, சக மீனவர்கள் போராடி மீட்டனர். குமரி மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை கடல் சீற்றமாக காணப்படும். இம்மாதங்களில் குமரி கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தடைக்காலம் என்பதால், நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க செல்வார்கள். இந்நிலையில் துறைமுக முகத்துவார பகுதியில் கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அதில் சிக்கி 7 படகுகள் சேதமடைந்த நிலையில், படகு ஒன்றில் இருந்த 4 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். மீனவர்களையும், படகையும் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு சக மீனவர்கள் மீட்டு, கரை சேர்த்தனர்.