ரூ. 5 ஆயிரம் கோடியில் 2 மின் நிலையம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சென்னையில் 2 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

Update: 2019-07-08 14:09 GMT
5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சென்னையில் 2 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பேரவையில் விதி 110 - ன் கீழ் தாக்கல் செய்த அறிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை சைதாப்பேட்டையில், 10 கோடி ரூபாய் செலவில், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் கட்டப்படும் - அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக " ஷூ" மற்றும் சாக்ஸ் விநியோகிக்கப்படும் என்பன உள்ளிட்ட அறி விப்புகளையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.


"பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகளில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகளில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார். பேரவையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசியபோது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி பிரிவு உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்