ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் - நல்லகண்ணு கோரிக்கை

தமிழகத்தில் ஆணவ படுகொலைகளும்,சாதி ரீதியான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-07-08 00:31 GMT
தமிழகத்தில் ஆணவ படுகொலைகளும்,  சாதி ரீதியான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அசோக் என்பவர் கடந்த 12 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவேந்தல் நிகழ்வு சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போது பேசிய நல்லகண்ணு, சாதி ஆணவ படுகொலைகளைக் தடுக்க  நீதிபதி தலைமையில் தனி குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்