"தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள்" - சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 17 தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி அளித்துள்ளார்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 17 தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி அளித்துள்ளார். சட்டப்பேரவையில், கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதுதவிர, 220 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம் அளித்தார்.