அத்திவரதர் உற்சவத்தின் 5ஆம் நாள் : ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி காட்சியளிப்பு
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 5ஆம் நாளான இன்று, ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். ஆனி மாத கோடை உற்சவத்தை முன்னிட்டு, வரும் ஜூலை 11 ஆம் தேதி வரை, காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படவுள்ளனர். சுவாமியை தரிசிக்க இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஆன்-லைனில் டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்பதால், நாளோன்றுக்கு 500 பக்தர்களே சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.