தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்வு : ஆபரண தங்கம் விலை உயரும் அபாயம்

தங்கம் இறக்குமதிக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 12 புள்ளி 5 சதவீதமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-07-05 12:13 GMT
10 சதவீத இறக்குமதி வரி காரணமாக தங்கம் கடத்துவது அதிகரித்து வரும் நிலையில், வரியை உயர்த்தியுள்ளதால் கடத்தல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தங்க இறக்குமதி வரி 2 புள்ளி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால், கிராமுக்கு 70 ரூபாய் வரை விலை அதிகரிக்கும்.  ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு 550 ரூபாய் வரை விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு தங்க மறு சுழற்சியை ஊக்குவிக்க தங்க இறக்குமதி அளவை ஆண்டுக்கு 100 டன்னாக குறைத்திருக்கலாம் அல்லது ஒட்டுமொத்தமாக தடை செய்திருக்கலாம் என்பது வர்த்தகர்களின் கருத்தாக உள்ளது. தற்போது, தங்கம் ஒரு சவரன் 26 ஆயிரம் ரூபாய் தொட்டுள்ள நிலையில், வரி உயர்வு தங்க நகை வாங்குபவர்களை பாதிக்கும் என்கிற கருத்து எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்