கடலூர் : நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற கைதி

கடலூர் மாவட்டம் சாத்தனத்தம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் 9 மாதங்களுக்கு முன்பு அரசுப் பேருந்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-05 05:05 GMT
கடலூர் மாவட்டம் சாத்தனத்தம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் , 9 மாதங்களுக்கு முன்பு அரசுப் பேருந்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.  திட்டக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சி​றையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமினில் எடுக்க யாரும் வராத காரணத்தினால் விரத்திடைந்த சக்திவேல், நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அங்குள்ள கழிவறையில் கிடந்த கண்ணாடி துண்டால் தனது இடது கையில் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவல் துறையினர் அவரை மீட்டு,  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்