கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் : 28,671 வீடுகள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், திமுக உறுப்பினர் மதிவாணன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டியது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கஜா புயலில் பாதித்த மக்களுக்காக முதற்கட்டமாக 300 சதுர அடியில்16 ஆயிரத்து 695 தனி வீடுகளும், 400 சதுர அடியில் 11 ஆயிரத்து 976 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.