"தீர்ப்பு நகல்- தமிழ் இடம்பெற நடவடிக்கை" - சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்களை வெளியிடும் பிராந்திய மொழிகள் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது குறித்து,சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

Update: 2019-07-04 13:31 GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்களை வெளியிடும் பிராந்திய மொழிகள் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது குறித்து,சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புகள்  தமிழிலும் மொழிப்பெயர்க்க வலியுறுத்தி ஆளும் அரசு தீர்மானம் கொண்டு வந்தால் அதை தி.மு.க ஆதரிக்கும் என அவர் தெரிவித்தார். மேலும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்