"ஆறுமுகசாமி ஆணையத்தில் அடுத்தமுறை ஆஜர்" - ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதில்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜராவேன் என பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Update: 2019-07-04 13:27 GMT
மின்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் எதற்காக தியானம் செய்தார் என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா மரணத்தில் என்ன மர்மம் இருக்கிறது எனக் கூறவில்லையே எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என தாம் கூறியது உண்மைதான் என்றார். இதுவரை நான்கு முறை விசாரணை ஆணையம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், போதிய நேரம் இல்லாததால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். அடுத்த முறை ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ் அனுப்பினால் கண்டிப்பாக ஆஜராகி, தனக்கு தெரிந்த விஷயங்களை எடுத்துரைப்பேன் என துணை முதலமைச்சர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்