"படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைப்பு" - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கருத்து

கள்ளச்சாரயம் பெருகும் என்பதால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-04 13:25 GMT
கள்ளச்சாரயம் பெருகும் என்பதால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறையின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி,  அதிகமாக குடித்தால் உடல் நலம் கெடத்தான் செய்யும் எனவும் அதற்கு தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார். தமிழகத்தில் மதுபானக்கடைகள் 6 ஆயிரத்து 132 கடைகளில் இருந்து 5 ஆயிரத்து 152 கடைகளாக குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், உடனடியாக கடைகள் குறைக்கப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகும் என்பதால் படிப்படியாக கடைகளை குறைத்து வருவதாக விளக்கம் அளித்தார்
Tags:    

மேலும் செய்திகள்