ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை : தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-04 12:18 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். அரசின் இந்த முடிவு விவசாயிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேலும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் அதில் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்