தூர்வாரப்படாத பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் : தரைதட்டி கவிழ்ந்த விசைப்படகு முற்றிலும் சேதம்

சீர்காழியை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் உள்ளதால் மீனவர்கள் அச்சத்துடன் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

Update: 2019-07-03 19:08 GMT
சீர்காழியை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் உள்ளதால் மீனவர்கள் அச்சத்துடன் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடித்து விட்டு திரும்பிய சாமிநாதன்  என்பவருக்கு சொந்தமான விசைப்படகு முகத்துவாரத்தில் தரைதட்டி கவிழ்ந்தது. இதையடுத்து சாமிநாதன் உள்ளிட்ட 4 மீனவர்கள்  படகில் இருந்து கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து பழையாறு மீனவர்கள் 6 விசை  படகுகளில் விரைந்து சென்று சாமிநாதன் படகை கயிறு கட்டி 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்டு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான விசை படகு முற்றிலும் சேதமடைந்தது. எனவே பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரவும் பாதிக்கபட்ட படகை சீரமைக்க நிவாரணம் வழங்கவும் அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்