அய்யா கோவில் ஆனி தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரத்தில் அய்யா வைகுண்டர் கோயில் ஆனித் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-01 21:15 GMT
கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10ம் திருவிழாவில், அய்யா நாராயணசுவாமியை, பல்லாக்கில் அழைத்து வந்து திருத்தேரில் அமர வைத்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பணகுடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்