மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மனு : 10 நாட்களாக வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் புகார்
கடலூரில் மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம், மாட்டுவண்டி தொழிலாளர்கள் பட்டை நாமம் அணிந்துவந்து மனு அளித்தனர்.
கடலூரில் மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம், மாட்டுவண்டி தொழிலாளர்கள் பட்டை நாமம் அணிந்துவந்து மனு அளித்தனர். சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. பின்னர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக, மணல் குவாரி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தாங்கள் வேலையின்றி தவித்து வருவதாக தெரிவித்துள்ள தொழிலாளர்கள், மணல் குவாரியை மீண்டும் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.