மதுபோதை தாயிடம் இருந்து மீட்குமாறு மகள் மனு
குடிப்பழக்கத்திற்கு அடிமையான தாயிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு, பள்ளி மாணவி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான தாயிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு, பள்ளி மாணவி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். சீருடையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், அரசுப் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், குடிப்பழக்கத்துக்கு அடிமையான தமது தாய், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதோடு, தம்மை, வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாக கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாய் மதுபோதையில் இருப்பதால், தங்களது வீட்டை மோசடியாக பலர் எழுதி வாங்க நினைப்பதாகவும் புகார் கூறினார். தற்போது, பாட்டி வீட்டில் இருந்து வருவதாக தெரிவித்த மாணவி, தமது எதிர்காலம் கருதி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒற்றை ஆளாய் புகாரளித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.