தண்ணீர் திருடப்படுவதாக கூறி சாலை மறியல் : மின் மோட்டாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் திருடப்படுவதாக கூறி, மோட்டரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

Update: 2019-07-01 20:05 GMT
அருமந்தை, கொக்குமேடு, மரம்பேடு ஆகிய கிராமங்களில் சட்டவிரோதமாக ராட்சத மோட்டார் மூலம் நிலத்தடி நீர் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அருமந்தை கூட்டுச்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மோட்டாரை கட்டையால் அடித்து பொதுமக்கள் நொறுக்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்