ஓசூர் : கடன் தொல்லையால் ஏரியில் குதித்த குடும்பம் - 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்
ஓசூரில், கடன் தொல்லை காரணமாக ஏரியில் மூழ்கி பலியான தம்பதிகள் உடல் மீட்கப்பட்ட நிலையில், அவர்களது 2 வயது குழந்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஓசூரில், கடன் தொல்லை காரணமாக ஏரியில் மூழ்கி பலியான தம்பதிகள் உடல் மீட்கப்பட்ட நிலையில், அவர்களது 2 வயது குழந்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெங்களுர் பொம்மசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் பொறியாளர் கண்ணன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் கடன் தொல்லை காரணமாக தனது மனைவி கல்பனா மற்றும் 2 வயது குழந்தையுடன் ஒசூர் தர்கா ஏரியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். கணவன்- மனைவி உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ள நிலையில், சிறுவனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.