ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்கள் : ரத்து செய்யும் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு கூட்டம் கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்வதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்தை ரத்து செய்து இந்த கூட்டத்தில் முடிவெடுத்த ரிசர்வ் வங்கி, அதன் பயன் வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.