தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Update: 2019-06-30 10:21 GMT
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில், இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்ற தகவலையும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்