தண்ணீர் தேடி வரும் யானைகள் : காட்டில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க மக்கள் கோரிக்கை
தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரளாவின் மூணாறு பகுதியில் முக்கிய அணைகள் வறண்ட நிலையில் காணப்படுகின்றன.
தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரளாவின் மூணாறு பகுதியில் முக்கிய அணைகள் வறண்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால், குடிநீருக்காக வனவிலங்குகள் காட்டை விட்டு அணைகட்டுகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக மூணாறில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான எக்கோ பாயிண்ட் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி வருகின்றன. குடிநீருக்காக வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் அபாயம் உள்ளதால், வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.