தஞ்சை விமானப்படை தள நிலைய நில விவகாரம் : மனுதாரருக்கு நிலங்களை திருப்பி வழங்க நீதிபதி உத்தரவு
விமானப் படை தள நிலையம் அமைக்க, தஞ்சை இனயத்துக்கண் பட்டியில், ஜான்சன், மல்லிகா மற்றும் ராஜா ஆகியோர் நிலங்களை கையகப்படுத்தி வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விமானப் படை தள நிலையம் அமைக்க, தஞ்சை இனயத்துக்கண் பட்டியில், ஜான்சன், மல்லிகா மற்றும் ராஜா ஆகியோர் நிலங்களை கையகப்படுத்தி வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் மதகோட்டையை சேர்ந்த ஜான்சன், மல்லிகா மற்றும் ராஜா ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெ.நிஷாபானு, ஒரு பகுதியில் நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்விற்காக, மற்றொரு பகுதியினர் நிலத்தை கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவது சரியல்ல என்று தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், மனுதாரர்களின் நிலங்களை கையகப்படுத்தி வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்து உத்தரவிட்டதுடன், மனுதாரர்களின் நிலங்களை உடனடியாக திரும்ப வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.