மூத்த அதிகாரியின் தொல்லையால் அரசு வேலையை உதறிய பெண் : பணியிடங்களில் பெண்களை தொடரும் பாலியல் தொல்லை

பணியிடங்களில் பெண்களுக்கு அதிகரிக்கும் பாலியல் பிரச்சினையின் முகத்தை உணர வைக்கும் வகையில் சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மூத்த அதிகாரியின் பாலியல் தொல்லையால் அரசு வேலையை இளம்பெண் ஒருவர் தொலைத்துச் சென்ற சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

Update: 2019-06-28 19:53 GMT
சென்னை  மாநகரத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசு அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார் ஒரு இளம்பெண். அதே அலுவலகத்தில் மாநகர வரைபடத்தையே வடிவமைக்கும் பணியில் உள்ள ஒரு மூத்த அதிகாரி புதிதாக வேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணின் எதிர்காலத்தை வடிவமைக்க முயன்றுள்ளார். அந்த பெண்ணிடம் வேலை நிமித்தமாக ஒருகட்டத்தில் அதை தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வர்ணிக்க துவங்கியிருக்கிறார். செல்போன் எண்ணுக்கு அவ்வப்போது குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார் அந்த உயரதிகாரி. எந்த வித பதிலும் அனுப்பாமல் இருந்து வந்த நிலையில் இதையே சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த அதிகாரி, வரம்பு மீறி வார்த்தைகளை பயன்படுத்தி குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. உயரதிகாரியை எதிர்கொள்ள முடியாமல் தவித்த அந்த பெண், பிரச்சினையை சமாளிக்க முடியாத சூழலில் வேலையை உதறி விட்டு போனார். அரசு வேலைக்கு சேர்ந்த 6 மாதங்களில் வேலையே வேண்டாம் என அந்த பெண் எடுத்த முடிவு  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தும் இதுபோல் தொடரும் அத்துமீறல்களால் பெண்கள் செய்வதறியாமல் குழம்பித் தவிக்கின்றனர். உயரதிகாரியை பகைத்துக் கொள்ள முடியாமலும், வேறு யாரிடமும் சொல்ல முடியாமலும் உள்ளுக்குள் புதைத்து கொண்டு பலரும் மவுனித்து இருக்கிறார்கள். இன்று அரசு வேலையே எட்டாக்கனியாக இருக்கும் நிலையில் தன் திறமையால் கிடைத்த அரசு வேலையை ஒரு அரசு உயரதிகாரியின் வக்கிரப் பார்வை தூள் தூளாக்கி இருக்கிறது.... 
Tags:    

மேலும் செய்திகள்