எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5 ஆயிரத்து 500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 800 லாரிகளுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படுகிறது.
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5 ஆயிரத்து 500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 800 லாரிகளுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.