"மாசு ஏற்படுத்தியிருந்தாலும், ஆலையை மூடுவது தீர்வாகாது" - வேதாந்தா நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில், இரண்டாவது நாளாக வேதாந்தா குழுமம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

Update: 2019-06-28 19:07 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில், இரண்டாவது நாளாக வேதாந்தா குழுமம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். அப்போது, தூத்துக்குடி சிப்காட் தொழில் வளாகத்தில் மூன்று அனல் மின் நிலையங்கள் உள்பட 67 தொழிற்சாலைகள் உள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், ஆலையை மூட உத்தரவிட முடியாது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், அப்படி மாசு ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு ஆலையை மூடுவது தீர்வாகாது எனத் தெரிவித்தார். இதனைதொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை நான்காம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்