ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது விவகாரம் : 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட முகமது உசேன்,ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Update: 2019-06-28 03:26 GMT
ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட முகமது உசேன்,ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்தது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை மாநகர காவல் துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான  விசாரணைக்காக, 3 பேரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணையின் முடிவில், 3 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அனுமதி அளித்து, உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்