பொதுமக்கள் சேர்ந்து தூர்வாரப்படும் குளம்

மண்ணை வெளியே கொண்டு செல்ல போலீஸ் தடை

Update: 2019-06-28 03:23 GMT
நாகை மாவட்டம் தொக்கலாக்குடி கிராமத்தில் உள்ள மன்மதன் குளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதியுடன் பொதுமக்களே சேர்ந்து 4 நாட்களுக்கு மேலாக தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் எடுக்கப்படும் களிப்பு மண் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் கொட்டப்பட்டது போக மீதமுள்ள மண் அருகில் உள்ள விளை நிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மணலை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மண்ணை வெளியே கொண்டு செல்ல தடை விதித்து போலீசார் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்