தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது : மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது

மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதற்காக, சட்டசபை கூட்டம் இன்று காலை கூடுகிறது.

Update: 2019-06-27 19:14 GMT
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு மக்களவை தேர்தல் நடைபெற்றதால் சட்டசபை கூட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை. மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. நான்கு மாத இடைவெளிக்கு பிறகு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்காக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை 23 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்