"குவாரி நீர் நன்றாக இருந்தால் குடிநீருக்கு பயன்படுத்த திட்டம்" - வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி
புதுக்கோட்டையில் பழபண்ணை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டையில் பழபண்ணை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சத்திய கோபால், கல்குவாரிகளின் தண்ணீரின் தரம் நன்றாக இருந்தால் குடிநீருக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இயற்கை பேரிடர் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக மூன்றாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.