தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?
தமிழகத்தின் அடுத்த டி.ஜி. பி யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உலவி வரும் நிலையில் டி.ஜி.பி தேர்வு முறை குறித்து பார்க்கலாம்.
காவல் துறையைப் பொருத்தவரை மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு ஆகிறவரே காவல்துறையின் தலைமை இயக்குனராக இருப்பார் .. தற்போதைய டி.ஜி.பி , டி.கே.ராஜேந்திரனின் பதவி நீட்டிப்பு இம்மாத இறுதியில் முடிவடைவதைத் தொடர்ந்து அந்த பதவியை பிடிப்பதற்காக இரண்டு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர் எப்படி தேர்வு செய்யப்படுவார் என்பதை பார்ப்போம்.
மாநிலத்தின் சார்பில் 3 முதல் 5 பேர் வரை கொண்ட அதிகாரிகள் பட்டியல் மத்திய தேர்வாணைய குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் . அவர்களில் சிறந்த அதிகாரிகளாக 3 பேர்களை குழு பரிந்துரைக்கும். எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார், எத்தனை ஆண்டு கள் பணியை முடித்து இருக்கிறார்கள் என்ற சீனியாரிட்டியை கணக்கிட்டு அவர்களில் ஒருவரை மாநில அரசு தேர்வு செய்து டிஜிபி என அறிவிக்கும் அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். டி.ஜி.பி நியமனம் மற்றும் பதவி நீட்டிப்பு குறித்து சர்ச்சை நிலவி வந்த நிலையில் உச்சநீதிமன்றம் டி.ஜி.பி நியமனம் குறித்து சில வரையறைகளை அறிவித்த்து. அந்த வழிகாட்டுதல் முறையின்படி டிஜிபியாக நியமிக்கப்படுவர் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது பணியில் இருக்க வேண்டும். தற்போது நியமிக்கப் பட உள்ள தமிழகத்தின் அடுத்த டிஜிபி இந்த வழிகாட்டுதலின் படியாக எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழ்நிலையில் தமிழக டி.ஜி.பியாக ஜெ.கே. திரிபாதி க்கு அதிக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.