6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் திடீர் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் 6 மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. கேரளாவின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழகத்தின் கோவை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மழை இல்லை. இந்நிலையில், இன்று, பிற்பகல், குரோம்பேட்டை, நங்கநல்லூர், தரமணி, பல்லாவரம், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழை பெய்ததற்கு, வெப்ப சலனமே, காரணம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், கடலூரில் - 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் : சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.அதே சமயம், தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளதால், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், அதிகபட்ச வெப்ப நிலையாக 41 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.