தென்மேற்கு பருவமழை தாமதம் ஏன்?
அடுத்த 4 முதல் 5 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 4 முதல் 5 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்யும் பருவ மழை தான், இந்தியாவின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கேரளாவில் ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கிவிடுவது வழக்கம். ஆனால், ஜூன் 8ம் தேதி தான் பருவமழை துவங்கியது. இதற்கு 'வாயு' புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை 'வாயு' புயல் எடுத்துச் சென்றதால், பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25ம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.