குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்
கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் நிலவும் குடிநீர் பிரச்சின்னையை சீர் செய்ய வலியுறுத்தியும், இதற்கு காரணமான உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வலியுறுத்தியும் திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுப்பு தெரிவித்த நிலையில், போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போராட்டம் நடக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.