என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து காவல்துறை ஆணையரிடம் மனு
என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.
என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உக்கடம், கரும்புக்கடை, அன்பு நகர் உள்பட 7 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து 6 பேரை கைது செய்தனர். அதில் சிலருக்கு இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் காவல்துறை ஆணையாளர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் அரசியல் காரணங்களுக்காக என்.ஐ.ஏ. அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அந்த அமைப்பு ஊடகங்களுக்கு தொடர்ந்து தவறான தகவல்களை அதிகாரிகள் அளிப்பதாகவும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.