திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. சில பகுதிகளில் மரங்கள் முறிந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை :
புதுக்கோட்டையில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கஜா புயலுக்குப் பிறகு தஞ்சையில் பெய்த மழை :
தஞ்சையிலும் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயலின்போது மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பல மாதங்களாக 100 டிகிரிக்கு மேல் அடித்த வெயில் தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் மேகங்கள் திரண்டு, திடீரென்று மழை பெய்தது.
புதுச்சேரியில் வெப்பத்தை தணித்த மழை :
கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால், புதுச்சேரி பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.