நெல்லையப்பர் கோயில் வைகாசி அஸ்த திருவிழா - பஞ்ச மூர்த்திகள் செப்பு தேரில் வீதி உலா
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் வைகாசி அஸ்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் வைகாசி அஸ்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒரே தேரில் எழுந்தருளினர். தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோயிலை சென்றடைந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.