"ராசிமணல் பகுதியில் தமிழகம் அணை கட்ட வேண்டும்" - ராசிமணல் நோக்கி புறப்பட்ட விவசாயிகள்
காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கற்கள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கற்கள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கற்களுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பூஜை செய்யப்பட்ட செங்கற்களை எடுத்துக்கொண்டு ராசிமணல் நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.