ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான கருத்தரங்கு கூட்டம் : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆதரவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் அபாயம் குறித்து கருத்தரங்கு சிதம்பரத்தில், நடைப்பெற்றது.

Update: 2019-06-11 21:22 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் அபாயம் குறித்து கருத்தரங்கு சிதம்பரத்தில், நடைப்பெற்றது. டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கூடுதல் நிதி ஒதுக்கி பாசன வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் நடுவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கட்டாயமாக குரல் எழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்