75 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்ற சுகாதார அமைச்சகம் திட்டம்
நாடு முழுவதும் 3வது கட்டமாக, 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை, மருத்துவ கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
நாடு முழுவதும் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான, ஒரு பகுதியாக மாவட்ட அரசு மருத்துவமனைகளை, மருத்துவ கல்லூரிகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. திட்டத்தின் முதல்கட்டமாக 58 மாவட்ட மருத்துவமனைகளும், 2வது கட்டமாக 24 மாவட்ட மருத்துவமனைகளும் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் இதுவரை 39 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மற்றவைகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது 3வது கட்டமாக 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை, மருத்துவ கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. சுமார் 325 கோடி ரூபாய் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டம், நிதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.