"2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வளர்ச்சி அதிகரித்துள்ளது" - கோவை ஜிஎஸ்டி ஆணையர் குமரேஷ் பேட்டி

கோவை துடியலூரில் உள்ள மாவட்ட இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தில், ஜி.எஸ்.டி. தொடர்பான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.

Update: 2019-06-07 21:50 GMT
கோவை துடியலூரில் உள்ள மாவட்ட இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தில்,  ஜி.எஸ்.டி. தொடர்பான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை ஜி.எஸ்.டி. ஆணையர் குமரேஷ், இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரேஷ், கடந்த 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். அரசாங்கத்திற்கு வருமானம் பெருகுவதால், அந்த வருவாய் மக்களின் குறைகளை தீர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.  ஜுன் 30-க்குள் ஜி.எஸ்.டி. வரி கட்ட தவறினால் அதன்பின்பு, அபராதத்துடன் தான் கட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்