தண்ணீரின்றி வறண்ட நிலம் - விவசாயிகள் வேதனை

இதே போல புதுக்கோட்டை மாவட்டத்திலும் காவரி நீர் பாயும் நான்கு தாலுக்காக்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Update: 2019-06-07 21:05 GMT
இதே போல புதுக்கோட்டை மாவட்டத்திலும் காவரி நீர் பாயும் நான்கு தாலுக்காக்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதாலும், மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை என்பதாலும், விவசாயிகள் பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். அங்கு பெரும்பலான பகுதிகளில், நிலத்தடி நீரை நம்பி, குறுவை சாகுபடிக்கு நடவு பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால் போதுமான நீர் கிடைக்காத‌தால், பல இடங்களில் பயிர்கள் வறண்டு கிடக்கின்றன.எனவே கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் பெற்று, விவசாயத்திற்கு புத்துயிர் வழங்கிட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்  மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்