விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாணவிக்கு நிதியுதவி
போலந்தில் விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாணவி கீர்த்திகாவுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவியை, எம்.பி. ரவிந்திரநாத் குமார் வழங்கியுள்ளார்.
போலந்தில் விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாணவி கீர்த்திகாவுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவியை, எம்.பி. ரவிந்திரநாத் குமார் வழங்கியுள்ளார். 'கார்க்கியூ NATIONAL AEROSPACE UNIVERSITY யில் 4 ஆண்டுகள் AIRCRAFT MAINTAINANCE படிப்பை இந்த மாதம் கீர்த்திகா நிறைவு செய்கிறார். தற்போது போலந்து நாட்டின் Analog Astronaut Training Center-ல் ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவும், அவர்களுடன் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் கீர்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து கீர்த்திகாவை நேரில் சந்தித்த, தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.