"பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது" - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2019-06-07 20:44 GMT
சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீர்காழி பேருந்து நிலையத்தில் நாளை வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் இது போன்ற கூட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது என கண்டனம் தெரிவித்தார். வேறு தலைப்புடன் கூட்டம் நடத்துவது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி,  விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்