காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் : 9.19 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்துவிட தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தல்

கர்நாடகா அரசு, 9 புள்ளி 19 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என, காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-06-07 20:27 GMT
காவிரி நதிநீர்  ஒழுங்காற்று குழு கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்றது. குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டபடி, 
தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 9 புள்ளி 19 டி.எம்.சி. தண்ணீரை மேலும் தாமதமின்றி உடனடியாக திறந்துவிட  வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட 4 மாநில பிரதிநிதிகளும், காவிரி நீர்  தொடர்பான தங்கள் தரப்பு புள்ளி விவரங்களை, ஒழுங்காற்று குழு கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்