ஏற்காட்டில் கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட சாலையை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையால் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-05 18:48 GMT
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையால் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் இருந்து ஆத்து பாலம் ராமர் கோவில் வரை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரம் இரண்டடுக்கு ஜல்லிகள் கொட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், கனமழை காரணமாக ஜல்லிகள் அடித்து செல்லப்பட்டது மட்டுமின்றி சாலையோரம் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர்களும் துண்டாக உடைந்து கிடந்தன. அவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்